பிஸியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் விவேக் நடிக்கும் ‘நான் தான் பாலா’ பட இசைவெளியீட்டு விழாவிற்கு வர எப்படி ஒப்புக்கொண்டாராம்? “நான், பத்துலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்போது பத்து லட்சாமாவது மரக்கன்று நடும் விழாவுக்கு ரஹ்மானை அழைத்திருந்தேன். அவரும் உறுதியாக வருவதாக சொன்னவர் கடைசி நேரத்தில் தவிர்க்கமுடியாத வேலை ஒன்றின் காரணமாக வரமுடியாமல் போயிற்று. ஆனால் அப்போதே என்னிடம் நிச்சயம் இன்னொரு நாள் உங்கள் விழாவிற்கு வருவேன் என சொல்லியிருந்தார். அதை ஞாபகத்தில் வைத்து ஒரு மெயில் மட்டும் தான் அனுப்பினேன். உடனே வருவதாக சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பிவிட்டார்” என்கிறார் விவேக் சந்தோஷமாக.