கடந்த வருடம் மாறுபட்ட கதை அமைப்பில் எடுக்கப்பட்டு, நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும் பெற்ற மலையாளப் படம் ‘மஞ்சாடிக்குரு’. இந்தப் படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன். குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படிருந்த இந்தப்படத்தில் பிருத்விராஜும் பத்மபிரியாவும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தார்கள். இந்தப்படத்தை தயாரித்ததும் அஞ்சலி மேனன் தான்.
மஞ்சாடிக்குரு படத்தை தொடர்ந்து தற்போது அஞ்சலி மேனன் மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். மூன்று ஹீரோக்களுக்கான நாயகிகள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தப் படத்தை தனது முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் பக்கா கமர்ஷியல் படமாக இயக்க இருக்கிறாராம் அஞ்சலி மேனன். மலையாள சினிமாவின் மெகாஹிட் படமான ராஜமாணிக்கம் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.