தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரணுடன் ஜோடி சேருவதில் ஹாட்ரிக் சாதனை செய்யவிருக்கிறார் காஜல் அகர்வால். ராஜமௌலி டைரக்ஷனில் வெளியான ‘மகதீரா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்ததும் படம் சூப்பர் டூப்பர்ஹிட் ஆகி இருவரும் ராசியான ஜோடி என பெயர் எடுத்ததும் பழைய, ஆனால் சுவையான வரலாறு. இந்த ராசிதான் மீண்டும் இருவரையும் ‘நாயக்’ என்ற படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கவைத்தது. இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக இந்த ஜோடி ஒரு படத்தில் இணைகிறது.
அதேபோல ‘சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு’ படத்துக்குப் பிறகு வெங்கடேஷும் அஞ்சலியும் ‘மசாலா’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த இரண்டு ஜோடிகளும் மீண்டும் இணைந்து நடிப்பதற்கு சினிமா செண்டிமெண்ட்டும் ஒரு காரணம்.