கமல் படத்தில் தொடர்ந்து இடம்பெறும் ஆனந்த் மகாதேவன்..!

91

மராட்டியத்தில் இருந்து நமக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நடிகர் தான் ஆனந்த் மகாதேவன். ஆனால் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் இவர். இந்தியிலும் மராத்தியிலும் பல படங்களை இயக்கி, நடித்தும் இருக்கிறார் இவர். இப்போது தமிழ்சினிமாவுக்கு இவரை அழைத்து வந்திருப்பவர் நம் உலகநாயகன் கமல் தான்..

தனது ‘விஸ்வரூபம்-2’ படத்தில் ஆனந்த் மகாதேவனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கமல். அந்தப்படம் இன்னும் வெளிவராத நிலையில் தற்போது ‘த்ரிஷ்யம்’ ரீமேக்காக ஜீத்து ஜோசப் இயக்கத்திலேயே தமிழில் உருவாகிவரும் ‘பாபநாசம்’ படத்திலும் இவரை தன்னுடன் இணைத்திருக்கிறார் கமல்.

படத்தில் அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனராக வரும் ஆஷா சரத்தின் கணவராக (மலையாளத்தில் சித்திக் நடித்த வேடம்) நடிக்கிறார் ஆனந்த் மகாதேவன்.. ஆக கமலின் குட் புக்கில் ஞானசம்பந்தன், ஜிப்ரான் வரிசையில் இவருக்கும் ஒரு இடம் கிடைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

Comments are closed.