படத்தை இயக்குவதோடு மூன்று வேடங்களிலும் நடிக்கும் அறிமுக நடிகர்..!

108

சில சமயம் இப்படி ஏதாவது புதுமைகள் தமிழ்சினிமாவில் நடக்கத்தான் செய்யும். ‘உண்மை’ என்கிற படத்தை தயாரித்து இயக்குவதோடு அதில் மூன்று வேடங்களிலும் அறிமுக நடிகரான ரவிகுமார் நடிப்பதையும் நாம் அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதல் படத்திலேயே போலீஸ் ஆபிசராக நடிப்பதோடு, மற்ற இரண்டு வேடங்களில் திருங்கையாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் நடித்திருக்கிறார் கதாநாயகனும் இயக்குனருமான ரவிகுமார். அரசியல்வாதிகளின் ஊழலை அம்பலப்படுத்தி ‘உண்மை’யை உலகுக்கு தெரியப்படுத்துவதுதான் படத்தின் கதையாம். இந்தப்படத்தில் ரவிக்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் சுஜிபாலா.

இந்தப்படத்தின்போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் நடந்ததாக ரவிகுமார் கூறியதும், இல்லை என்று மறுத்து சுஜிபாலா ரவிகுமார் மேல் வழக்கு தொடர்ந்ததும் உங்களுக்கு ஞாபகம் வரலாம். முக்கிய வேடங்களில் ராதாரவி, கோட்டா சீனிவாசராவ், முன்னாள் நடிகை சார்மிளா மற்றும் ஷகீலா நடிக்கிறார்கள். ஷகீலாவுக்கு இதில் ட்ராகுலா வேடமாம்.

Comments are closed.