அதர்வா படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடிய அனைகா சோட்டி..!

244

Anaika-Soti dance

காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்தை காதலித்து, காதலில் சேரமுடியாமல் தற்கொலை செய்துகொள்வாரே அனைகா சோட்டி.. அவரை ஞாபகம் இருக்கிறதா..? தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா தயாரித்து நடிக்கும் ‘செம போத ஆகாத’ என்கிற படத்தில் விலைமாது கேரக்டரில் மிக துணிச்சலுடன் நடித்து வருகிறார்..

இந்தப்படத்தில் ‘காலி பண்ணறேன்’ என்கிற ஒன்னரை நிமிட குத்துப்பாடல் ஒன்று இடம்பெறுகிறது.. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்பாடலை ரம்யா நம்பீசன் கிக்கேற்றும் குரலில் பாடியுள்ளாராம். இந்தப்பாடலுக்கு அனைகா சோட்டி ஆட்டும் ஆட்டம் ‘குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் போல ரசிகர்களை கவரும் விதமாக இருக்குமாம்.

Comments are closed.