ஸ்ருதியை தாக்கிய மர்ம நபர்

80

ஸ்ருதிஹாசனை மர்மநபர் ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை 9.30 மணி அளவில் தான் தங்கியிருந்த் அறையின் காலிங்பெல் அடிக்கவே யாரென்று பார்க்க கதவை திறந்திருக்கிறார் ஸ்ருதி. அப்போது வாசலில் நின்றிருந்த மர்மநபர் அவரை திடீரென தாக்க முயற்சித்திருக்கிறார்.

உடனே சுதாரித்துக்கொண்ட ஸ்ருதி அவனை பிடித்து தள்ளிவிட்டு கதவை வேகமாக சாத்தினார். இதில் அந்த மர்ம நபரின் கை கதவிடுக்கில் சிக்கியதும் தன்னை விடுவித்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டான். ஸ்ருதிஹாசனுக்கு காயம் இல்லை என்றாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீண்டுவர நிறைய நேரம் பிடித்தது.

இதுபற்றி தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்ருதிஹாசன் தான் நலமாக இருப்பதாகவும் தன்னை தாக்கவந்தது ரசிகர் என்ற போர்வையில் வந்தவனா என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.