’சீதா பயணம்’ விமர்சனம்

நடிகர்கள் : நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜூன், அர்ஜூன், துருவ் சார்ஜா, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கோவை சரளா
இசை : அனூப் ரூபன்ஸ்
ஒளிப்பதிவு : ஜி.பாலமுருகன்
இயக்கம் : அர்ஜூன்
தயாரிப்பு : ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் – அர்ஜூன்

பெரும் பணக்காரர் சத்யராஜின் ஒரே மகளான ஐஸ்வர்யா அர்ஜூன், தான் செல்ல வேண்டிய ஒரு இடத்திற்கு போகும் வழியில் சிலரால் பல இடையூறுகளை சந்திக்கிறார். நாயகன் நிரஞ்சனாலும் அவருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கிடையே, அவர் செல்ல இருந்த இடத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள். காலதாமதமாக வந்ததால் ஐஸ்வர்யா அர்ஜூன், அந்த விபத்தில் இருந்து தப்பித்து விடுகிறார். விபத்தில் சிக்காமல் தான் உயிர் பிழைத்ததற்கு காரணம், வழியில் தனக்கு இடையூறு செய்தவர்கள் தான் என்று உணரும் ஐஸ்வர்யா அர்ஜூன், அவர்களை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்கிறார்.

அதன்படி, அவர்களை மீண்டும் சந்திக்க ஐஸ்வர்யா அர்ஜூன் மேற்கொள்ளும் பயணத்தில் அவருக்கு காதலோடு, சில பிரச்சனைகளும் வருகிறது. அது என்ன ?. அதில் இருந்து விடுபட்டு அவர் நினைத்ததை செய்தாரா ?, என்பதை பாசம், கதல், அன்பு ஆகிய உணர்வுகளை போற்றும் வகையில் சொல்வதே ‘சீதா பயணம்’.

நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். தன் மகளுக்காக அவர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அன்பு மற்றும் பாசம் நிறைந்திருப்பதோடு, மனித உணர்வுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கருத்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜூன், பாசம் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தை மிக பக்குவமாக கையாண்டு கவனம் ஈர்த்திருக்கிறார். கதபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் ஐஸ்வர்யா, தனது பயணத்தின் இனிமையான மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நடிப்பின் மூலம் பார்வையாளர்களிடத்திலும் கடத்தி விடுகிறார்.

நாயகனாக நடித்திருக்கும் நிரஞ்சன், துள்ளளும் துடிப்பும் நிறைந்த நடிப்பில் அசத்தியிருக்கிறார். தமிழுக்கு புதியவர் என்றாலும் தனது நடிப்பு மற்றும் உடல் மொழியால் மக்கள் மனதில் சட்டென்று தங்கி விடுகிறார்.

பிரகாஷ் ராஜ், சத்யராஜ் மற்றும் கோவை சரளா ஆகியோரது கதாபாத்திரங்களும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய அனுபவமான நடிப்பும் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

அர்ஜூன் மற்றும் துருவ் சார்ஜா சிறப்பு தோற்றத்தில் வருகிறார்கள். சிறிது நேரம் வந்தாலும், இருவரும் தங்களுக்கு உண்டான பணியை சிறப்பாக செய்து, அவர்களது ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜி.பாலமுருகன், சீதாவுடன் பயணிக்கும் உணர்வை கொடுத்திருக்கிறார்.

அனுப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஆயுப் கான், எந்த ஒரு இடத்திலும் படம் தொய்வடையாமல் இருக்க அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.

காதல் மற்றும் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கும் அர்ஜூன், சீதாவின் பயணம் மூலம் மனிதம் வளர்த்திருக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்தாலும் தனது பாணியிலான ஆக்‌ஷன் காட்சிகளில் தானே தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், ஒரு இயக்குநராக ரசிகர்களை மகிழ்விக்கும்படி படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

ரேட்டிங் 3/5

seetha payanam movie reviewseetha payanam reviewtamil movie seetha payanam reveiwசீதா பயணம் திரைப்பட விமர்சனம்சீதா பயணம் விமர்சனம்