‘ரஜினி கேங்க்’ விமர்சனம்

நடிகர்கள் : ரஜினி கிஷன், த்விவிகா, முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி
இசை : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு : என்.எஸ்.சதீஷ் குமார்
இயக்கம் : எம்.ரமேஷ் பாரதி
தயாரிப்பு : மிஷ்ரி எண்டர்பிரைசஸ் – சி.எஸ்.பத்மசந்த், சி.அரியண்ட் ராஜ், ரஜினி கிஷன்

காதலர்களான நாயகன் ரஜினி கிஷனும், நாயகி த்விவிகாவும் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார். வழியில் திருடனான கல்கியும் அந்த காரில் ஏறிக்கொண்டு பயணிக்கிறார். இரவு நேரத்தில் பயணிக்கும் இவர்கள், ஏதோ ஒரு இடத்திற்கு சென்று விடுகிறார்கள். பல்வேறு தரப்பினர், பல காரணங்களுக்காக இவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, ரஜினி கிஷன் – த்வ்விவிகாவுக்கு திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்குப் பிறகு காமெடி ஜானராக பயணித்த படம் திடீரென்று வேறு ஒரு ஜானரில் பயணிக்க தொடங்குகிறது. அது என்ன ஜானர் ?, அதன் மூலம் இயக்குநர் சொல்ல நினைத்ததை சரியாக சொன்னாரா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி ஜானர் படத்திற்கு பொருந்தும் முகம். ஆட்டம், காதல், காமெடி என படம் முழுவதும் அசால்டாக நடித்திருப்பவர் முதல் படம் என்ற பயமே இல்லாமல் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் த்விவிகா, காமெடி மற்றும் காதல் பாடல்கள் என இரண்டு தளங்களிலும் கவர்கிறார். நடிப்பும் அளவு.

முனீஷ்காந்த், கூல் சுரேஷ், மொட்ட ராஜேந்திரன், கல்கி ஆகியோரது காமெடி கூட்டணி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கமர்ஷியலாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படத்தையும், பாடல் காட்சிகளையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.

சாதாரணமான கதையை, மிக சாதாரணமாகவே படத்தொகுப்பு செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.கே.வினோத் கண்ணா, காட்சிகளின் நீளத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ் பாராதி, முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பார்வையாளர்கள் எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

எளிமையான கதையாக இருந்தாலும் இயக்குநர் எம்.எஸ்.ரமேஷ் பாரதி, காட்சிகளை காமெடியாக சித்தரித்து ‘ரஜினி கேங்க்’ மூலம் பெரும் காமெடி கலவரத்தை நடத்தியிருக்கிறார்.

ரேட்டிங் 3/5

rajini gang movie reviewrajini gang reviewரஜினி கேங்க் திரைப்பட விமர்சனம்ரஜினி கேங்க் விமர்சனம்