நகர்வலம் – விமர்சனம்

தண்ணீர் லாரி ஓட்டும் இளைஞன் பாலாஜிக்கும் அரசியல்வாதியின் மகளான கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் தீக்‌ஷிதாவுக்கும் காதல் அரும்புகிறது.. வழக்கம்போல காதலியின் குடும்பத்தினர் காதலுக்கு தீவிர எதிர்ப்பு காட்டுவதோடு, பாலாஜியின் கதையையும் முடிக்க தயாராகின்றனர்.. காதல் வென்றதா..? இல்லை பெற்றோரின் வன்மம் வென்றதா என்பது க்ளைமாக்ஸ்.

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் துறுதுறு விடலைபையானாய் நாம் பார்த்த பாலாஜி தான், இதில் இன்னும் கொஞ்சம் பக்குப்பட்டிருக்கிறார்.. காதலுக்காக எந்த மெனக்கெடலும் இல்லாமல் இளையராஜா பாடல்களை வைத்தே காதையை உஷார் பண்ணும்போது ‘அட’ என ஆச்சர்யப்பட வைக்கிறார்.

இளையராஜாவின் ரசிகையாக வரும் தீக்‌ஷிதா பள்ளி மாணவியாகவும், கல்லூரி மாணவியாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யோகிபாபு, பல சரவணன் இருவரும் இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் கலகலப்பாக நகர உதவி இருகின்றனர்.

தீக்‌ஷிதாவின் தந்தையான மாரிமுத்து, அரசியல்வாதி சித்தப்பாவான ரவி மற்றும் அண்ணன் முத்துக்குமார் உட்பட பலரும் தங்களது கதாபாத்திர தேர்வை நியாயப்படுத்துகின்றனர்.. ஆனாலும் கதை பழைய அரைத்த மாவுதான் என்பதால் இந்த நகர்வலம் அவ்வளவாக உற்சாகம் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்

Nagarvalam ReviewNagarvalam Tamil Movie Reviewநகர்வலம் – விமர்சனம்பாலாஜி