‘ப்ளடி பெக்கர்’ விமர்சனம்

நடிகர்கள் : கவின், ரெடின் கிங்ஸ்லி, ப்ருத்வி ராஜ், சுனில் சுகதா
இசை : ஜென் மார்டின்
ஒளிப்பதிவு : சுஜித் சாரங்
இயக்கம் : சிவபாலன் முத்துக்குமார்
தயாரிப்பு : ஃபிலமெண்ட் பிக்சர்ஸ் – நெல்சன் திலீப்குமார்

அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ப்ளடி பெக்கர்’ தலைப்பு போல் திட்ட வைக்கிறதா?, பாராட்ட வைக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

பிச்சைக்காரரான நாயகன் கவின், அரண்மனை ஒன்றின் உள்ளே சென்று பார்க்க ஆசைப்பட்டு அதனுள் நுழைகிறார். அப்போது அவர் எதிர்பார்க்காத வகையில், அந்த அரண்மனையின் வாரிசுகளில் ஒருவராக நடிக்க வேண்டிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அதன்படி, நடிப்பவர் அங்கு பலவித பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு, உயிருக்கே ஆபத்தான நிலையில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

ஆசை, எதிர்பார்ப்பு, கவலை இல்லாத வாழ்க்கை, நக்கலான உடல்மொழி என்று பிச்சைக்காரராக வலம் வரும் கவின், தனது நடிப்பு மூலம் முழு படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. ரெடின் கி்ங்ஸ்லியின் காமெடியும் எடுபடவில்லை.

ஜென் மார்டினின் இசை, சுஜித் சாரங ஒளிப்பதிவு, ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு அனைத்தும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

பிச்சைக்காரரின் வாழ்க்கை பின்னணியை கொண்டு அறிமுக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் வடிவமைத்த கதைக்கருவில் இருந்த சுவாரஸ்யம் திரைக்கதையில் இல்லை.

சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் பிளாக் காமெடி என்று இரண்டு ஜானர்களில் பயணிக்கும் படத்தில் சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும் பல காட்சிகள் ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது.

ரேட்டிங் – 2/5

bloody beggar movie reviewBloody Beggar reviewkavin blood beggar reviewப்ளடி பெக்கர் சினிமா விமர்சனம்ப்ளடி பெக்கர் திரைப்பட விமர்சனம்ப்ளடி பெக்கர் விமர்சனம்