அப்புச்சி கிராமம் – விமர்சனம்

விண்கல் ஒன்றால் தாக்கப்படும் ஒரே கிராமத்திலே அனைவரும் இன்னும் எட்டு நாளில் சாகப்போகிறார்கள் என்று தெரிந்தால் என்ன செய்வார்கள். அதைத்தான் அறிவியல்பூர்வமாக, உணர்ச்சிகளை கலந்து ‘அப்புச்சி கிராமம்’ ஆக சொல்லியிருக்கிறார்கள்.

அப்புச்சி கிராமத்தின் மீது விண்கல் விழுவதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை.. விண்கல் விழுவதற்கு முன் இருந்த பிரச்சனைகள் எல்லாம், என்னும் எட்டு நாளில் மீண்டும் விண்கற்கள் தாக்குதல் நிகழும் என்கிற நிலையில் ஒவ்வொன்றாய் சமரசத்துக்கு வருகின்றன.

அதற்கு முன் முறுக்கிக்கொண்டிருந்த கிராமத்து தலைவர்களான அண்ணன் தம்பியான எம்.ஜி.குமார்-ஜோ மல்லூரி இருவரும் பகையை முறித்து ஒற்றுமையாகின்றனர்.. ஜோமல்லூரியின் மகளை காதலிக்கும் அவரது ட்ரைவர் துணிந்து பெண் கேட்க, அவரும் மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார்.

கோவில் கொண்டாட்டத்தில் போலீசால் எடுத்துச்செல்லப்பட்ட சாமி சிலை மீண்டும் ஊருக்குள் வர, அனைவரும் ஒற்றுமையுடன் திருவிழா எடுக்கின்றனர். விண்கற்கள் மீண்டும் விழும் நாளில் என்ன நடக்கின்றது என்பது க்ளைமாக்ஸ்…

புதுமுகம் பிரவீன்குமார் உட்பட, அனுஷா, சுவாசிகா, சுஜா என மூன்று ஹீரோயின்களும் தங்களது இருப்பை வித்தியாசமாக பதிவு செய்திருக்கிறார்கள்.. படத்திற்கு பக்கபலமாக ஜி.எம்.குமார், ஜோ மல்லூரி, கஞ்சா கருப்பு ஆகியோரின் நடிப்பு அமைந்துள்ளது.. முதலைமச்சராக வரும் நாசரின் கதாபாத்திரமும் நிறைவு.

கஞ்சப்பிரபுவான கஞ்சா கருப்பு மூடிய நிலவறைக்குள் மாட்டிக்கொண்டு வாழ்வின் நிலையாமையை உணர்ந்து மனம் மாறுவது நல்ல காட்சி. விண்கற்கள் விழும் க்ளைமாக்ஸ் காட்சியை தத்ரூபமாக படமக்கியிருக்கிறார்கள்.

படத்தின் கதையை ஜினேஷ் என்பவர் எழுத, இந்தப்படத்தை இயக்கியிருப்பது ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த வி.ஐ.ஆனந்த். நாளை மரணம் உறுதி என்பது தெரிந்துவிட்டால் அனைவரும் பகை மறந்து ஒன்றாகி விடுவர்.. அதனால் வாழும் நாட்களில் ஏன் இந்த ஏற்றத்தாழ்வும் போராட்டமும் என்கிற உண்மையை உரத்துச்சொல்கிறது இந்த ‘அப்புச்சி கிராமம்’.

அனுஷாஅப்புச்சி கிராமம் – விமர்சனம்எம்.ஜி.குமார்கஞ்சா கருப்புசுஜாசுவாசிகாஜி.எம்.குமார்ஜோ மல்லூரிபிரவீன்குமார்வி.ஐ.ஆனந்த்