பிரபல கதை வசனகர்த்தா செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ் இயக்கி இருக்கும் படம் இது. அதுமட்டுமல்ல படத்தில் ஒரு காட்சியில் கூட, ஒரு பெண் கூட இல்லாமல் முழுக்க முழுக்க ஆண்களே நடித்துள்ள படமும். ரசிகர்களின் ரசனைக்கு எந்தவிதத்தில் தீனி போட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
பணியில் இருக்கும் வரை நேர்மையாக இருந்து பின்னர் எளிய வாழ்க்கை வாழும் ஒரு போலீஸ் அதிகாரியின் (அருள்ஜோதி) பெரிய மகன் இறந்து விட அவரது இளைய மகனுக்கு (ஷாரியா) அண்ணனின் நண்பர்களோடு தொடர்பு ஏற்படுகிறது. அனில் என்பவன் (ஆபீஸ் சீரியல் நாயகன் கார்த்திக்) உட்பட்ட அந்த மூன்று நண்பர்களின் நோக்கம் கொள்ளையடித்து பணக்காரர்கள் ஆவது.
தன் தந்தையின் இப்போதைய நிலைமை காரணமாக நேர்மையாக இருப்பதில் பலன் இல்லை என்று எண்ணும் அந்த இளைய மகனும் மூவரோடு சேர்கிறான். நான்கு பேரும் சேர்ந்து ஐந்து லட்ச ரூபாயை கொள்ளையடிக்க, எதிர்பாராத விதமாக ஷாரியா அதை கொண்டுவரும் வழியில் பணத்தை தொலைத்து விடுகிறான்.போது அவன் அதை இழந்து விடுகிறான் .
ஆனால் மற்ற மூவரும் அதை நம்பாமல் ‘ஒரு வாரத்தில் பணம் வேண்டும்.. இல்லாவிட்டால் உன் அப்பாவை கொன்று விடுவோம் என்று மிரட்டுகின்றனர் இந்த நிலையில் தனது உயிரை காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக ஒரு கோடீஸ்வரர் தனது தந்தைக்கு, கொடுத்த பிளாங்க் செக் ஒன்று இருப்பது ஷாரியாவுக்கு தெரிய வருகிறது.
தந்தையின் பெயரில் இருக்கும் அந்த காசோலையை அந்த மூவர் குரூப்பிடம் கொடுக்கும் அணில் அதை எப்படியாவது மாற்றி அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை எடுத்துக்கொள்ள சொல்கிறார். ஆனால் நண்பர்களோ ஐந்து லட்சத்துக்கு பதிலாக ஐந்து கோடியாக அடிக்க திட்டமிடுகிறார்கள்.. இவர்கள் திட்டம் பலித்ததா என்பதை கொஞ்சம் காமெடி, கொஞ்சம் த்ரில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
கதாநாயகன் (வில்லன்) கார்த்திகேயனுக்கு அதிகமான வசனங்கள் இல்லாவிட்டாலும், அவரது நடிப்பிலேயே வில்லத்தனம் கலந்து நடித்திருப்பது சிறப்பு. வில்லத்தனமான கதாபாத்திரத்தை இவர் ரொம்பவும் அழகாக ஏற்று நடித்திருக்கிறார். வரத்து நண்பர்களாக வரும் இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோரில், இவன்ஸ்ரீ சீரியசாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு நகைச்சுவையை கொடுத்திருக்கிறார். ஷாரியா, வெகுளியான இளைஞன் எப்படி நடந்துகொள்வானோ அதற்கேற்ற நடிப்பை அழகாக பிரதிபலித்திருக்கிறார். தனது நடிப்பில் எதார்த்தம் மாறாமல் அழகாக நடித்திருக்கிறார். இடைவேளைக்குப்பின் ஜானியாக என்ட்ரி கொடுக்கும் ஜெகதீஷ் ஒரு கலக்கு கலக்குகிறார்.
இடைவேளைக்கு முன் கொஞ்சம் அலுப்பு தட்டவைப்பது போல மெதுவாக நகரும் கதை, ஷாரியா பணத்தை தொலைத்தவுடன், பிளாங்க் செக் இருப்பது தெரிந்தவுடன் சூடு பிடிக்கிறது.. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் புதிது தான்.. படமாக்களில் ஆங்காங்கே சிறு சிறு குறைகள் இருந்தாலும் ஒரு கிரைம் கதையை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். சின்ன பட்ஜெட்டில் ரசிக்கும்படியான படம் தான் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை’..