‘விட்னஸ்” விமர்சனம்

நடிகர்கள் : ரோகிணி, ஷ்ரத்த ஸ்ரீகாந்த், சுபத்ரா ராபெர்ட், சண்முகராஜா, அழகம்பெருமாள், ஜி.செல்வா, ராஜீவ் ஆனந்த், தமிழரசன், ஸ்ரீநாத்
இசை : ரமேஷ் தமிழ்மணி
ஒளிப்பதிவு : தீபக்
இயக்கம் : தீபக்
தயாரிப்பு : டிஜி விஸ்வ பிரசாத்

பார்த்திபன் என்ற இளைஞர், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் செல்லும் போது உயிரிழக்கிறார். அந்த இளைஞரது அம்மாவான இந்திராணி, ஒரு துப்புரவுப் பணியாளர். தனது ஒரே மகனை இழந்துவிட்ட இந்திராணி, சட்டவிரோதமாக அவனைக் கூட்டிச்சென்று அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார்.

பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், பார்வதி என்ற இளம் கட்டடக் கலைஞர் இந்திராணி்யிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள்.
அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கான பதிலடியாக, இந்திராணியின் வாழ்விலும், பார்வதியின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. வழக்கு என்ன ஆனது, நீதி கிடைத்ததா என்பதே ‘விட்னஸ்’ படத்தின் மீதிக் கதை.

மனித கழிவுகளை மனிதர்களை வைத்து சுத்தம் செய்யப்படுவதற்கு தடை விதித்த போதிலும், அது தற்போதும் தொடர்ந்து கொண்டு இருப்பதோடு, அத்தகைய பணியாள் பல அப்பாவிகள் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடந்துக்கொண்டிருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கும் இப்படம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது, என்பதையும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறது.

பார்த்திபன் வேடத்தில் நடித்திருக்கும் இளைஞர் சில காட்சிகளில் வந்தாலும் கவனம் பெறுகிறார்.

பார்த்திபனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகினி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, மலக்குழியில் விழுந்து பலியான இளைஞர்களின் குடும்பங்களின் ஒட்டு மொத்த குமுறலாக வலம் வருகிறார்.

ஆண் வர்க்கத்தின் எதிர்ப்பை தனி ஒருவராக எதிர்கொள்ளும் தைரியமான பெண்ணாக நடித்திருக்கும் ஷ்ரத்த ஸ்ரீநாத், ஒரு கட்டத்தில் தனது அம்மாவிடம் தனது இயலாமையை வெளிப்படுத்தி கண் கலங்கும் இடத்தில் இயல்பாக நடிக்கிறார்.

சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஜி.செல்வா, ராஜீவ் ஆனந்த், தமிழரசன், ஸ்ரீநாத், சுபத்ரா ராபெர்ட் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

ரமேஷ் தமிழ்மணியில் இசை கதாபாத்திரமாகவே பயணித்திருக்கிறது. கதாபாத்திரங்கள் மன உணர்வை படம் பார்ப்பவர்களிடம் கத்தி காட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும் தீபம் தான் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். சாமாணிய மனிதர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் தீபக், இப்படி ஒரு வாழ்க்கை, இப்படிப்பட்ட உயிர் பலிகள் நாட்டில் நடந்துக்கொண்டிருப்பதை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

மனிதரின் மலத்தை மனிதரே அல்லும் அவலத்திற்கு அரசு தடை விதித்தாலும், மலக்குழிகளில் இறங்கி மனிதர்கள் மாண்டு போகும் சம்பவங்கள் தற்போதும் தொடர்ந்துக்கொண்டிருக்க அரசே முதல் காரணம் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் தீபக், அதை தடுக்க முடியாது என்பதையும் மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.

இந்த வேலையை இவர்கள் தான் செய்ய வேண்டும், என்ற ஆதிக்க வர்க்கத்தின் அடக்கு முறையை அம்பலப்படுத்தி சாட்டையால் விலாசியிருக்கும் இயக்குநர் தீபக், இதற்கு எதிராக நீதித்துறை மூலம் போராடினாலும் இறுதியில் வெற்றி பெறப்போவது என்னவோ அரசு எந்திரம் தான் என்பதை மிக இயல்பாக சொல்லி கைதட்டல் பெறுகிறார்.

ரேட்டிங் 4/5

aha ottaha tamil ottkollywood movie reviewRohinishradha srikanthtamil movie witness reviewwitness review