’மட்டி’ விமர்சனம்


நடிகர்கள் : யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அமித் சிவதாஸ் நாயர்
இசை : ரவி பஸ்ரூஸ்
ஒளிப்பதிவு : கே.ஜி.ரதீஷ்
தயாரிப்பு : பிரேமா கிருஷ்ணதாஸ்
இயக்கம் : டாக்டர்.பிரபகல்

சினிமா என்பது மிகப்பெரிய காட்சி ஊடகம். அதில் அதிகமாக பேசுவதை விட, படம் பார்ப்பவர்களை பேச வைக்கும் விதத்தில் இருக்கும் படங்களுக்கு தான் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும். அத்தகைய ஒரு படம் தான் இந்த ‘மட்டி’.

மட் ரேஸ் எனப்படும் ஆபத்து நிறைந்த மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், இந்திய சினிமாவில் வெளியான முதல் மட் ரேஸ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருப்பதோடு, மட் ரேஸ் என்றால் என்ன, அதில் இருக்கும் ஆபத்துகள் மற்றும் அந்த ரேஸில் நடக்கும் சாகசங்கள் என அத்தனையையும் மெய்சிலிரிக்க வைக்கும் விதத்தில் விவரிக்கிறது.

கதையின் முதன்மை கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா மற்றும் ரிதன் கிருஷ்ணா, மோதலில் ஈடுபடுவதிலும் சரி, வில்லனின் சவாலில் வெற்றி பெறுவதற்காக் ஒன்று சேர்ந்து மட்டி ரேஸியில் இரங்குவதிலும் சரி, தங்களது பணியை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் அமித் சிவதாஸ் நாயர், நோஹா என்ற வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷ், காட்சிகள் அனைத்தையும் பிரமாண்டமாகவும், மிரட்டலாகவும் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக மட்டி ரேஸ் காட்சிகளை படமாக்கிய விதம் நமமி சீட் நுணியில் உட்கார செய்கிறது.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூஸ் காட்சிகளுக்கு ஏற்றபடி இசையமைத்திருக்கிறார். சகதியில் சிக்கிக்கொண்டு திணறும் கார்கள், கரடுமுரடான பாதையில் சீரிப்பாயும் கார்கள், என அனைத்தின் சத்தத்தையும் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.

களம் கார் பந்தயம் நடக்கும் இடமாக இருந்தாலும், காட்சிகள் அனைத்தையும் முழுமையாக ரசிக்கும்படி தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், எந்த காட்சியையும் இழுக்காமல் நறுக்கென்று கத்திரி போட்டிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநர் டாக்டர்.பிரகபலுக்கு இது தான் முதல் படம். ஆனால், படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள். மேக்கிங்கில் அப்படி ஒரு நேர்த்தியை காட்டியிருக்கும் இயக்குநர் பிரபகல், முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருப்பது வியக்க வைக்கிறது.

மொத்தத்தில், ’மட்டி’ மேக்கிங் கிங்

kollywood movie muddymuddy film reviewmuddy reviewpan india movie muddytamil movie muddy review