’சிவகுமாரின் சபதம்’ விமர்சனம்


நடிகர்கள் : ஹிப் ஹாப் ஆதி, மாதுரி, விஜய் கார்த்திக், பிராங் ராகுல், இளகோகுமரன் மற்றும் பலர்
இசை : ஹிப் ஹாப் ஆதி
ஒளிப்பதிவு : அர்ஜுனராஜா
இயக்கம் : ஹிப் ஹாப் ஆதி
தயாரிப்பு : ஹிப் ஹாப் ஆதி, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்

இளைஞர்களின் ஹைகானாக உருவெடுக்க நினைக்கும் ஹிப் ஹாப் ஆதி, மீண்டும் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இயக்கி நடித்திருக்கும் படம் தான் ‘சிவகுமாரின் சபதம்’.

நாயகன் ஆதி, ஒரு சபதம் போடுகிறார். அந்த சபதத்தில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதை, சபதம் போடுவதை விட்டுவிட்டு, அனைவரிடத்திலும் பாசமாக இருங்கள், என்ற மெசஜோடு சேர்த்து, ஜாலியாகவும், கலகலப்பாகவும் சொல்வது தான் படத்தின் கதை.

துள்ளல் நடிப்பு மூலம் இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளையடிக்கும் ஹிப் ஹாப் ஆதி, அவ்வபோது அட்வைஸ் செய்வது சற்று சலிப்படைய செய்கிறது. இருந்தாலும், சோகமான விஷயங்களை கூட ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்ற ஆதியின் கருத்து இளைஞர்களை வெகுவாக கவர்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் மாதுரி, கொடுத்த வேலையை குறை வைக்காமல் செய்திருந்தாலும், ஆதியுடனான காட்சிகளில் நடிக்கும் போது அடக்கி வாசித்திருக்கிறார்.

ஆதியின் சித்தப்பாவாக நடித்திருக்கும் பிராங்க் ராகுல் காமெடி, செண்டிமெண்ட் என இரண்டிலும் குறை வைக்கவில்லை.

ஆதித்யா கதிரின் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. வில்லனாக நடித்துள்ள விஜய் கார்த்திக், அவருடைய தங்கையாக நடித்துள்ள ரஞ்சனா நாச்சியார் இருவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

ஆதியின் தாத்தாவாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் இளகோகுமரன், கவனம் பெறுகிறார்.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகமாகவும், கேட்கும் ரகமாகவும் உள்ளது. அர்ஜுனராஜா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அழகாக உள்ளது.

கதை எழுதி இயக்கியிருக்கும் ஹிப் ஹாப் ஆதி, காஞ்சிபுரம் பட்டு நெசவார்களின் துயரத்தை அழுத்தமாக பதிவு செய்தாலும், அதை இளைஞர்களுக்கான ஜாலியான ஒரு படமாக கொடுத்திருக்கிறார்.

முதல் பாதி முழுவதும் ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களமாக நகரும் படம், இரண்டாம் பாதியில் உணர்வுப்பூர்வமான விசயத்தை விளையாட்டாக சொல்வதால், சற்று சலிப்பு ஏற்படுகிறது. இருந்தாலும், இறுதியில் சொல்லப்படும், பணத்தை விட, எப்போதும் கூட நான்கு பேர் இருப்பது தான் நல்லது” என்ற மெசஜ் மன நிறைவை கொடுக்கிறது.

மொத்தத்தில், ‘சிவகுமாரின் சபதம்’ இளைஞர்களுக்கான ஜாலியான பாடம்.

hip hop aadhiyin sivakumarin sabathamkollywood movie reviewMadhuriprank star raghulsivakumarin sabatham film reivewsivakumarin sabatham reviewtamil cinema reviewtamil movie sivakumarin sabatham