’அரண்மனை 3’ விமர்சனம்


அரண்மனையில் இருக்கும் பேய், நாயகி ராஷி கண்ணாவை அலறவிடுகிறது. அதேபோல், அவரை காதலிக்கும் ஆர்யா அரண்மனையில் வேலை செய்யும் சிலரை கொலை செய்கிறார். எதற்காக இந்த கொலைகள்?, அரண்மனையில் இருக்கும் அந்த பேய் யார்? ஆகிய கேள்விகளுக்கான விடையை படம் பார்ப்பவர்கள் பதறும்படியும், சிறிக்கும்படியும் சொல்வது தான் ‘அரண்மனை 3’.

நாயகன் ஆர்யா கொடுத்த வேலையில் குறை வைக்கவில்லை என்றாலும், அவர் வரும் காட்சிகளும் குறைவாகவே இருக்கிறது.

படத்தின் மற்றொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு எண்ட்ரி கொடுக்கும் சுந்தர்.சி கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

படத்தின் நாயகி ராஷி கண்ணா, பாடல் காட்சிகளுக்கு மட்டும் இன்றி கதையின் ஓட்டத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தில், பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரமும் படத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக இருப்பதோடு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமாகவும் இருக்கிறார்.

யோகி பாபு மற்றும் விவேக் ஆகியோர் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. அதிலும், மனோபாலா, நளினி, மைனா ஆகியோரது கூட்டணி அவ்வபோது நம்மை குபீரென்று சிரிக்க வைக்கிறது.

சாக்‌ஷி அகர்வால், வேல ராமமூர்த்தி, வின்செண்ட் அசோகன், சம்பத்ராஜ் என படத்தின் நடித்திருக்கும் அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

சி.சத்யாவின் இசையும், யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் காட்சிகளை மிரட்டலாகவும், பிரம்மாண்டமாகவும் காட்டியிருக்கிறது.

நட்சத்திரப் பட்டாளத்தின் கலகலப்பான காமெடி காட்சிகளுடன், பேய்களின் திகில் காட்சிகளையும் சேர்த்து, ரசிகர்களை பயமுறுத்தியும், சிரிக்க வைத்தும் வரும் அரண்மனை படங்களின் வரிசையில், இந்த ‘அரண்மனை 3’ பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் வியப்படைய செய்கிறது.

ரசிகர்களின் பல்சை நன்கு அறிந்த இயக்குநர் சுந்தர்.சி, மக்கள் எதை எதிர்ப்பார்ப்பார்களோ அதை மிக சரியான அளவில் கொடுத்து சிரிக்க வைப்பதோடு, சீட் நுணியில் உட்காரவும் வைக்கிறார்.

மொத்தத்தில், ‘அரண்மனை 3’ அனைத்து தரப்பினரும் கொண்டாட கூடிய காமெடி திருவிழா

aranmanai 3 cinema reviewaranmanai 3 movie reviewaranmanai 3 reviewAryakollywood movie reviewsKollywood NewsRashi KhannaSakshi Agarwaltamil movie aranmanai 3 reviewVivekYogi BAbu