அமிதாப் பச்சனுக்கு அழைப்பு அனுப்ப தயாராகும் பார்த்திபன்..!  

213

parthiban-amithab-bachan

தற்போது ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்ட பார்த்திபன், வரும் டிச-4ஆம் தேதி நடைபெறவுள்ள அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.. வெறும் இசைவெளியீட்டு விழாவாக இல்லாமல், தனது குருநாதர் பாக்யராஜை கௌரவிக்கும் விழாவாக இதை நடத்த தீர்மானித்துள்ளாராம்.

இந்த விழாவில் இதுநாள் வரை பாக்யராஜிடம் உதவியாளர்களாக பணியாற்றி திரையுலகில் பிரகாசித்த இயக்குனர்களையும், பாக்யராஜின் இயக்கத்தில் நடித்த நடிகர்களையும் இந்த விழாவில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க இருக்கிறாராம் பார்த்திபன். அந்தவகையில் பாக்யராஜ் இயக்கியா\ ‘ஆக்ரி ரஸ்தா’ என்கிற இந்திப்படத்தில் ஹீரோவாக நடித்த அமிதாப் பச்சனையும் அழைத்து இந்த விழாவை மிக பிரமாண்டமாக நடத்தி தனது குருவை ககௌரவப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன்.

Comments are closed.