தம்பிக்காக ‘அமரகாவியம்’ படைக்கும் ஆர்யா..!

121

‘நான்’ படம் மூலமாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை நடிகராக்கிய பெருமைக்குரியவர் இயக்குனர் ஜீவா சங்கர். இவர் அடுத்ததாக தற்போது இயக்கும் படம் தான் ‘அமரகாவியம்’. புத்தகம்’ படம் மூலமாக அறிமுகமான ஆர்யாவின் தம்பி சத்யா தான் இந்தப்படத்தின் ஹீரோ. கேரளாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான மியா ஜார்ஜ் தான் கதாநாயகி.

தனது தம்பிக்காகத்தான் இந்தப்படத்தை தானே சொந்தமாக தயாரிக்கிறார் ஆர்யா. 1980களில் இருந்த ஊட்டி தான் இந்தப்படத்தின் கதைக்களம். இதற்காக அந்த வருடங்களில் ஊட்டி எப்படி இருந்ததோ அதற்கேற்ற மாதிரி மிகப்பெரிய பொருட்செலவில் செட் போட்டிருக்கிறார்கள்.

இதற்காகவே ஊட்டியில் பாதி கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பல கட்டடங்களை கேட்டு வாங்கி அதில் படத்திற்கு தேவைப்படும் விதமாக பிரமாண்டமான அற்புதமான செட்டை அமைத்துக் கொடுத்திருக்கிறாராம் ஆர்ட் டைரக்டர் செல்வகுமார். தனது முந்தைய படம் போல த்ரில்லராக இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு அழகான காதல் கதையாக இந்த அமரகாவியம்’ இருக்கும் என்கிறார் ஜீவா சங்கர்.

Comments are closed.