கமல் அப்படித்தான்.. சிலரை பிடித்துவிட்டால் போதும், அவர்கள் பெரியவரா, சின்னவரா என்றெல்லாம் பார்க்கமாட்டார்… அவர்கள் மீது தனி பிரியம் காட்ட ஆரம்பித்துவிடுவார். நாகேஷ், நாசர், சந்தான பாரதி இவர்களுக்கும் கமலுக்குமான நட்பு உங்களுக்குத்தான் தெரிந்திருக்குமே.
அப்படித்தான் தேவர் மகன்’ படத்தில் நடித்த வடிவேலுவை பிடித்துவிட தனது அடுத்தடுத்த படங்களில் அவருக்கு வாய்ப்பளித்து அவரது வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தார். இதேபோலத்தான் நகைச்சுவை நடிகர் வையாபுரியும் தனது படங்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவர் மீதும் பிரியம் செலுத்தினார்.
தற்போது லேட்டஸ்டாக அவரது அன்புப்பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். வாகை சூடவா’ படத்தில் இவரின் இசையில் உருவான ‘சரசர சாரக்காத்து’ பாடல் கமலை ரொம்பவே கவர்ந்துவிட உடனே ஜிப்ரானை டெல்லிக்கு வரவழைத்தவர் தனது ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தந்து ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து விலகாத ஜிப்ரானுக்கு, தான் அடுத்து நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் தந்து சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளார். ‘விஸ்வரூபம்-2’வில் ஜிப்ரானின் இசையமைத்த விதம் கமலை மயக்கிவிட்டது ஒரு காரணம் என்றாலும்..
முதல் வரியை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
Comments are closed.