மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் அமலாபால்

58

ஒரு படம் ஹிட்டானால் அடுத்த படத்திலும் அந்த கூட்டணி தொடர்வதுதானே வழக்கம். இதற்கு மலையாள சினிமா மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன?அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கி கடந்தவருடம் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘ரன் பேபி ரன்’. இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலாபால்.

அதன்பின் மோகன்லாலை வைத்து ‘லோக்பால்’ என்ற படத்தை இயக்கினார் ஜோஷி. ஆனால் ‘ரன் பேபி ரன்’ படத்தைப்போல இதற்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் லஞ்ச ஊழலுக்கு எதிரான ஒரு நல்லபடம் என்ற பெயரை பெற்றது.

இப்போது மீண்டும் ஜோஷியின் டைரக்‌ஷனில் நடிக்கிறார் மோகன்லால். படத்தின் பெயர் ‘லைலா ஓ லைலா’. இந்தப்படத்தில் மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் அமலாபால். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளார் ஜோஷி.

காமெடி கலந்த த்ரில்லராக உருவாக இருக்கும். படத்தின் கதையை எழுதுபவர் இந்தியில் வெற்றிபெற்ற ‘கஹானி’ மற்றும் ‘டி-டே’ ஆகிய படங்களின் கதாசிரியரான சுரேஷ் நாயர். அதனால் இந்தப்படம் ஜோஷியின் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்குமாம்.

Leave A Reply

Your email address will not be published.