தெலுங்கில் ராம்சரணுடன் நாயக், அல்லு அர்ஜூனுடன் இத்தரம்மாயிலதோ என இரண்டு படங்களில் நடித்துவிட்ட அமலாபால் இப்போது நான் ஈ புகழ் நானியுடன் சமுத்திரக்கனி இயக்கிவரும் ஜண்டாபாய் கபிராஜு படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் ஜெயம்ரவியை வைத்து அவர் இயக்கிவரும் நிமிர்ந்துநில் படத்தின் தெலுங்கு பதிப்புதான்.. ஒரேநேரத்தில் இருமொழிகளில் உருவாகிவரும் இந்தப்படத்தின் தமிழ் பதிப்பிலும் அமலாபால்தான் நடிக்கிறார்.
நாளுக்கு நாள் வாய்ப்புகள் ஒருபக்கம் அமலாபாலை தேடிவர அவரது தோற்றத்திலும் தேஜஸ் கூடிக்கொண்டே வருகிறது. இதற்கு காரணம் கேட்டால், “நான் எப்போதுமே சிரித்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன். அவ்வளவு ஏன்.. சின்ன ஜோக்கிற்கு கூட சத்தம் போட்டு சிரிப்பேன்..சிரிப்புதான் நம்மை எப்போதுமே பாஸிட்டிவ் எனர்ஜியுடன் இருக்கவைத்திருக்கும். அதேநேரம் எதிர்மறையான எண்ணங்களையும் நம்மிடம் அண்டவிடாது” என்கிறார் சீரியஸாக. அமலாபால் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.