சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தை எப்போது காட்டுவார்கள் என யானைப்பசியுடன் காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு சோளப்பொறி போடப்போகிறார் சௌந்தர்யா அஸ்வின். கோச்சடையான் படத்தின் டீஸரை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்போவதாக தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டு ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் சௌந்தர்யா. இருந்தாலும் இனிமேல் ஆடியோ ரிலீஸ் நடத்தி, அதற்குப்பிறகு படத்தை வெளியிட்டு… ரசிகர்களின் ஏக்கம் எப்போது தீருமோ தெரியவில்லை. சரி.. படம்வரும் வரை ரசிகர்கள் இந்த டீஸரை பார்த்துக்கொண்டே நாட்களை கடத்திவிட மாட்டார்களா என்ன?
Prev Post
Next Post