அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு வெளியாகப்போகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் வகையில் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. சரி அதற்குப்பின் அஜீத் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு என்பதுதான் கோடி ரூபாய் கேள்வி(எத்தனை நாளைக்குத்தான் மில்லியன் டாலர் கேள்வி என சொல்லுவது?).
அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு ‘யாவரும் நலம்’ படத்தை இயக்கிய விக்ரம் கே.குமாருக்கு கிடைக்கலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் இருவரும் சந்தித்து இதுபற்றி டிஸ்க்ஷன் எதுவும் செய்யவில்லை என்றாலும் பொதுவான ஒரு நண்பரின் மூலம் இதுபற்றி பேசியதாக தெரிகிறது. காரணம் விக்ரம் கே.குமாரின் டைரக்ஷன் ஸ்டைலை அஜீத் வெகுவாக ரசிப்பாராம்.
தற்போது தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா என்று தாத்தா, மகன், பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரை வைத்து ‘மனம்’ என்ற படத்தை இயக்கிவருகிறார் விக்ரம் கே.குமார். அனேகமாக அஜீத்தின் ஆரம்பம் ரிலீஸாவதற்குள் இவர்கள் இருவரும் இணையும் படத்தைப் பற்றிய உறுதியான அறிவிப்பு வெளியானாலும் ஆகலாம்.