‘ஆரம்பம்’ படத்தில் நடித்தபோது, மும்பையில் நடந்த அதன் படப்பிடிப்பில் ஒரு சண்டைக்காட்சியின் போது ஒரு பயங்கர விபத்தை சந்தித்தார் அஜித். அப்போதைக்கு தற்காலிக சிகிச்சை செய்துகொண்டு படப்பிடிப்பைத் தொடர்ந்த அஜித்தை, கண்டிப்பாக ஆபரேஷன் செய்து கொள்ளவேண்டுமென்று அவரது குடும்ப டாக்டர் வற்புறுத்தியதாக தெரிகிறது.
தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வீரம்’ படத்தில் நடிக்க இருந்ததால், அதற்கு முன்பே ஆபரேசன் செய்துகொள்ளவும் அஜித் முதலில் சம்மதித்ததாக தெரிகிறது. ஆனால் படத்தை விரைவாக பொங்கலுக்கு கொண்டுவரும் பொருட்டு அப்போதும் ஆபரேசனை தள்ளிபோட்டார் அஜித்.
இப்போது கௌதம் மேனன் டைரக்ஷனில் நடிக்க இருக்கும் அஜித் படப்பிடிப்பு துவங்குமுன் எந்தக்காரணம் கொண்டும் தள்ளிப்போடாமல் ஆபரேசனை முடித்துவிட்டுத்தான் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.. அஜித்தும் அதைத்தான் செய்வார் என நாமும் நம்புவோம்.