
படிக்காத சித்த வைத்தியர் பரத், பலமுறை தனது படிப்பறிவின்மையால் ஏமாற்றப்படுகிறார். அதனால் படித்த பெண்ணாக திருமணம் செய்ய நினைக்கும் பரத்துக்கு கல்லூரி சென்றுவரும் நந்திதாவை திருமணம் செய்ய ஆசை.. தன்னை டாக்டர் என உல்டா விட்டு அவரை கல்யாணமும் செய்துகொள்கிறார்.
ஆனால் நந்திதாவும் படிக்காத டுபாக்கூர் தான்.(கல்லூரி சென்று வருவதில் ஒரு ட்விஸ்ட் இருக்கு). இருவரும் உண்மையை மறைத்து ஆடும் நாடகம் கடைசியில் அவர்களை எங்கே கொண்டுபோய் விடுகிறது என்பது தான் க்ளைமாக்ஸ்..
பரத், நந்திதா கேரக்டர்களில் ஒரு சஸ்பென்ஸ் ஒளிந்திருக்கிறது. அதனால் அவர்களது நடிப்பை பற்றி இங்கே சொன்னால் படம் பார்க்கும்போது சுவராஸ்யம் இருக்காது. குறிப்பாக பரத் அவரது 25வது படமாகிய இந்தப்படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் காலத்துக்கும் அவர் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்.
படத்தின் 50 சதவீத வசனம் தம்பி ராமையாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றால் அவரது கேரக்டரின் வலிமையை பார்த்துக்கொள்ளுங்கள். இதுதவிர இந்தப்படத்தில் நட்சத்திர சிதறலாய் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் கருணா, மயில்சாமி, இமான் அண்ணாச்சி மூவரும் தான் டாப்-3 லிஸ்ட்டில் இடம்பிடிக்கிறார்கள்.
கல்வியின் அவசியத்தை இதுவரை சொல்லியிராத வித்தியாசமான கோணத்தில் வலியுறுத்தும் விதமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் எல்.ஜி.ரவிசந்திரன். படம் முடிந்து வெளிவரும்போது கவிதாலயா நிறுவனத்தின் அசாத்திய துணிச்சல் நம்மை பிரமிக்க வைக்கிறது.
Comments are closed.