“கேரக்டர் ரோல் ப்ளீஸ்” – சோனா வேண்டுகோள்..!

197

கொஞ்ச நாட்களாக கவர்ச்சி நடிகை சோனாவை திரையில் பார்க்கமுடியவில்லையே என குழம்பிய ரசிகர்களுக்கு சோனாவே அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.. எல்லா கவர்ச்சி நடிகைகளும் ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிப்புக்கு மாறவிரும்பும் பொதுவான முடிவைத்தான் சோனாவும் எடுத்துள்ளார்.. காரணத்தை அவரே சொல்கிறார் கேளுங்கள்..

“அப்படி இப்படி என்று 75 படங்களுக்கு மேல் கவர்ச்சி காட்டி நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலுமே எல்லாப் பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் எனக்கே கவர்ச்சியாக நடித்து போரடித்து விட்டது. இனி கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற மாதிரி, குணசித்திர கேரக்டர்ன்னு வரும்போது சோனா என்று எழுதிவிட்டு என்னை அழையுங்கள்” என இயக்குனர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் சோனா.

Comments are closed.