நரேன் படத்துக்கு புகழ் வெளிச்சம் பாய்ச்சிய வைகோ..!

208

அரசியல் கட்சித்தலைவரான வைகோ ஒரு படத்தை பார்த்துவிட்டு, படம் ரிலீஸாவதற்கு முன் மனதாரா பாராட்டியுள்ளார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.. அப்டி அவர் பார்த்த படம் இரா.சரவணன் டைரக்சனில் நரேன், சூரி இணைந்து நடித்துள்ள ‘கத்துக்குட்டி’. அதுமட்டுமல்ல, படத்தை இரண்டு தடவை பார்த்திருக்கிறார்.. காரணம் படத்தின் மையக்கருத்தாக எடுத்தாளப்பட்டிருக்கும் விவசாய பிரச்சனை தான்.

இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த வைகோ, “முள்ளி வாய்க்கால் கொடுமைக்குப் பிறகு நான் படம் பார்ப்பதை அடியோடு குறைத்துக் கொண்டேன். ஆனால், ‘கத்துக்குட்டி’ படத்தை சில நாட்களுக்குள்ளேயே இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். நுட்பமான வசனங்களும், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரியான கருத்துச் சொல்லும் பாணியும் என்னை இந்தப் படத்தின் பெரிய ரசிகனாக்கிவிட்டன” என பாராட்டினார். வைகோவுடன் சேர்ந்து பாராதிராஜாவும் இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

Comments are closed.