அக்-9ல் ‘இஞ்சி இடுப்பழகி’ ரிலீஸ்..!

184

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணம் தி ஒன் அன்ட் ஒன்லி அனுஷ்கா தான். குண்டு அனுஷ்கா எக்ஸர்சைஸ் செய்வதாக ஓடிவரும் போட்டோவை பார்க்கும்போது நிச்சயம் இந்தப்படத்திற்கு ஆடியன்ஸை அழைத்து வரும் வேலையில் முக்கிய பங்கு அனுஷ்காவுக்குத்தான் என்பது தெரிகிறது. கெட்டப்புகளுக்காக மெனக்கெடுவதில் அனுஷ்கா லேடி கமலாக மாறிவிட்டார் என்பது மட்டும் உறுதி.

ஏற்கனவே 40 லட்சம் பார்வையாளர்கள் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் டீசர்களை பார்த்து அதை ட்ரெண்டிங்கிலேயே வைத்துள்ளனர். படத்தின் கதாநாயகன் ஆர்யா என்பது கூடுதல் ப்ளஸ். பிவிபி சினிமா தயாரிக்கும் இந்தப்படத்தை பிரகாஷ் கொவேலமுடி இயக்கியுள்ளார். வரும் அக்-9ல் இஞ்சி இடுப்பழகி’ படம் ரிலீஸ் ஆக இருக்கிறது..

Comments are closed.