
தமிழில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட ராசிகர்கள் அனைவருக்குமே நன்கு பரிச்சயமானவர் தான் நந்திதா தாஸ்.. சொல்லப்போனால் இன்றும் கூட இவரை ‘அழகி’ என்றே ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த அழகி இப்போது மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஆம். சமுத்திரகனி தயாரித்து, கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு சமமான கதையின் நாயகி கதாபாத்திரத்தில் நந்திதா தாஸ் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை பாடலாசிரியரும் மரியான் பட வசனகர்த்தாவுமான குட்டி ரேவதி இயக்கவுள்ளார்.
Comments are closed.