திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.
இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி 2018 நாளை காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.
திரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு. நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது

Comments are closed.