பிரசாந்திற்கும் கிடைத்தது ஒரு ரஜினி டைட்டில்..!

202

johny

படம் எப்படியிருக்கிறது என்பது ரெண்டாவது விஷயம் தான். முதலில் அந்தப்படத்திற்கு ரஜினி படத்தின் டைட்டில் கிடைத்தாலே ரசிகர்களிடம் எளிதில் ரீச்சாகிவிடும். அந்தவகையில் சாகசம் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நடித்துவரும் புதிய படத்திற்கு ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படமான ‘ஜானி’ படத்தின் டைட்டிலை வைத்துள்ளார்கள்..

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.வெற்றிச்செல்வன் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஜீவா சங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர். படத்தின் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபு, ஆனந்தராஜ், சாயாஜி ஷிண்டே, அஷுதோஷ் ராணா உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் உள்ளனர்.

இந்தப்படத்திற்கு மூன்று புது இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.. அவர்கள் யார் என்பதை இசைவெளியீட்டு விழா நடக்கும் வரை சஸ்பென்சாக வைத்துள்ளார்கள். இதுவரை மூன்றுகட்டமாக 77 நாட்கள் படப்படிப்பு நடத்தி டப்பிங்கையும் முடித்துவிட்டார்கள்.. இனி பாடல் காட்சிகளை மட்டும் படமாக்கவேண்டியதுதான் பாக்கி. பாடல் காட்சிகாலை கனடாவிலும் மொரிஷியஸ் தீவுகளிலும் எடுக்க இருக்கிறார்களாம்

Comments are closed.