செப்டம்பரில் திரைக்கு வரும் கிருஷ்ணாவின் ‘வீரா’..!

270

veera

ரஜினி பட டைட்டில் அவ்வளவு சுலபமாக யாருக்கும் கிடைத்துவிடாது.. ஆனால் கிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு ரஜினியின் வீரா டைட்டில் கிடைத்துள்ளது. அந்தவகையில் இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராஜாராமன்.. இப்போது லேட்டஸ்ட் செய்தியாக இந்த செப்டம்பர் மாதத்தில் ரிலீஸாவதிற்கு ஓரிரு படங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இப்போட்டியில் ‘வீரா’ படமும் களமிறங்கியுள்ளது

கிருஷ்ணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள இப்படத்தில் கருணாகரன், தம்பி ராமையா, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆக்சன்-காமெடி படமாக ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் பாடல்களுக்கு வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பிண்ணனி இசையை எஸ்.என்.பிரசாத் அமைத்துள்ளார் இப்படத்தில் பாக்கியம் ஷங்கர் எழுத்து பணியாற்றியுள்ளார்.

சலீம்’, ‘ஜிகர்தண்டா’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘சேதுபதி’ போன்ற வெற்றி படங்களை வெளியிட்டதின் மூலம் தங்களின் பெயரையும் திறமையையும் நிலைநாட்டிவரும் ‘ஆரஞ்சு கிரியேஷன்ஸ்’ தற்பொழுது ‘வீரா’ படத்தை ‘வன்சன் மூவிஸ்’ நிறுவனத்தோடு இணைந்து வெளியிடவுள்ளது.

Comments are closed.