
சாருஹாசன் கமலின் அண்ணன் என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் அடிக்க வருவீர்கள் என்பது நிச்சயம்.. ஆனால் இத்தனை வயதில் அவர் நடிக்கிறார் என்பதை விட, ஒருபடத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பதுதான் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.
ஜீவா, ஸ்ரேயா நடித்த ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி தயாரிக்கும் படத்தில் தான் வில்லனாக நடிக்கிறார் சாருஹாசன். 86 வயது சாருஹாசன் பவுடர் உலகின் டானாக நடிக்கிறார். பவர் இயக்குகிறார். படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்குகிறார்.
பொதுவாக நம்ம ஊரில் மட்டும் பவுடர் என்றால் முகத்துக்கு போடும் பவுடர் என நினைப்போம், இந்தியாவின் மற்ற நகரங்களில் பவுடர் என்றால் ட்ரக்கிங் என நினைப்பார்கள். மொத்தம் 12 கேரக்டர்களை உள்ளடக்கி கதையமைக்கப்பட்டுள்ள இந்தப்படம் நோ மேக்கப், நோ ட்ரக் என்ற இரண்டு விசயத்தை கையிலெடுத்திருக்கிறது.
Comments are closed.