தீபாவளிக்கு வருகிறது ஆண்களே இல்லாத படம்..!

223

thiraiku-varatha-kathai

Related Posts

புதுமை என்கிற பெயரில் ஏதோ ஒரு கதைக்களத்தில் சில படங்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி மலையாள சினிமாவின் முன்னனி இயக்குநர் துளசிதாஸ் இயக்கிய ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. மம்முட்டி, மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னனி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை இயக்கிய துளசிதாஸ் தமிழில் இயக்கும் முதல் படம் இது.
.
ஏற்கனவே கார்த்தியின் ‘காஷ்மோரா’ மற்றும் தனுஷின் ‘கொடி’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு வருகின்றன. ஆனால் இந்த தீபாவளி ரிலீஸில் திரைக்கு வராத கதை’ படமும் இப்போது சேர்ந்துள்ளது.. இந்தப்படத்தில் நதியா, இனியா, ஈடன், கோவைசரளா ஆகியோர் நடித்துள்ளனர்.

பிலிம் இண்ஸ்டிட்யூட் மாணவிகள் ஒன்றாக சேர்ந்து சொந்தமாக ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகிறது. இதன் பின்னணியில் த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்த படமாக உருவாகியுள்ளது இந்தப்படம்.

Comments are closed.