2 லட்சம் குடும்பங்களுக்கு உதவும் அரவிந்த்சாமி..!

211

aravind samy help 3
சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்சத்திரங்கள் ஒவ்வொருவருவரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் ‘தனி ஒருவன்’ ஆக 7௦ ஆயிரம் பேருக்கு வெள்ள சமயத்தில் உணவு வழங்கி உதவி செய்தார் அரவிந்த்சாமி.

தற்போது ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்புடன் இணைந்து இரண்டாம் கட்டமாக மருத்துவ உதவிகளை வழங்குகிறார். “இது எங்களின் இரண்டாம் கட்ட நடவடிக்கை. 2 லட்சம் குடும்பங்களுக்கு இந்த முறை உதவிசெய்ய முடிவு செய்துள்ளோம். அதற்கான பொருட்கள் அனைத்தும் வந்துவிட்டன. இன்று அவற்றை பேக் செய்து இன்றுமுதல் வழங்க ஆரம்பித்துவிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் குடிநீர் பாட்டில்கள், வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த எலக்ட்ரால் பவுடர், குளிர்பானங்கள், கெல்லாக்ஸ் போன்றவை அடங்கிய பாக்கெட்டுகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவிருக்கிறார்.

Comments are closed.