
சென்னையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர்.. இதில் நம் தமிழ் நட்சத்திரங்களின் பங்களிப்போடு தெலுங்கு, மலையாள, இந்தி திரையுலகங்களிலும் இருந்து பல நடிகர், நடிகைகள் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.
தற்போது ஒரு கொடி ரூபாய் நிவாரண நிதி வழங்கி அக்சய் குமாரும் அந்தப்பட்டியலில் இணைந்துள்ளார். நம் தமிழ் இயக்குனர்களான பிரியதர்ஷ, பிரபுதேவா ஆகியோரின் டைரக்சனில் நடித்து தன்னை உயர்த்திக்கொண்ட இவர் தற்போது கத்தி படத்தின் ஹிந்தி பதிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னையின் மக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்சய் குமார் அதுகுறித்து இயக்குனர் பிரியதர்ஷனிடம் பேசியிருக்கிறார். உடனே பிரியதர்ஷன் சுஹாசினி மணிரத்னத்தை அவர்களை தொடர்பு கொள்ள கூறியுள்ளார்.
அந்தவிதமாக சுஹாசினியின் வழிகாட்டுதலில் ஜெய்ந்த்ரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ருபாய் 1 கோடி ருபாய் காசோலையை நடிகர் அக்ஷ்ய் குமார் அளித்துள்ளார். இந்த பூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு மற்றும் நிவாரணப்பொருட்களை கொடுத்து வருகிறது.
Comments are closed.