நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படத்தை தூசி தட்டி எடுத்து டிஜிட்டல் படுத்தி, சினிமாஸ்கோப் ஆக்கி வெளியிட்டார்கள். படம் 100 நாட்கள் ஓடி சினிமா உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது. அதன்பிறகு ‘திருவிளையாடல்’ படத்தை அதேபோன்று வெளியிட்டார்கள். பின்னர் வெளியிடப்பட்ட ‘வசந்தமாளிகை’ படத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதேபோல எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. தற்போது 1965ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றியிருக்கிறார்கள். பி.ஆர்.பந்துலு இயக்கிய இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். மற்றும் நம்பியார், நாகேஷ், மனோகர் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்கள். வரும் வெள்ளிக்கிழமை(மார்ச்-14) இந்தப்படம் தமிழ்நாடெங்கும் ரிலீஸாகிறது