‘தடையற தாக்க’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து தான் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்திற்கு ‘மீகாமன்’ என பெயரிட்டுள்ளார் மகிழ்திருமேனி. இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றும் அதற்கு ஸ்ருதியும் பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்றும் முதலில் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த அழகுபொம்மை டாப்ஸியே இந்தப்படத்திலும் நடிக்கலாம் என தெரிகிறது. ஆக்ஷன் படம் என்பதால் ஹீரோவுடன் லவ், டூயட் பாடும் வேலை மட்டும் தான் என்பதால் டாப்ஸியே போதும் என தீர்மானித்துவிட்டார்களாம்.
‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவாவைச் சுற்றிய கதைக்களம் என்பதால் வட இந்திய நடிகர்கள் பலரும் நடிக்க இருக்கிறார்கள்.