சுந்தர்.சி படத்திற்கு இசையமைக்கும் ஆதி..!

74

ஹரி இயக்கத்தில் தற்போது ‘பூஜை’ படத்தில் நடித்துள்ள விஷால், இந்தப்படத்தை தீபாவளி ட்ரீட்டாக தர கடுமையாக உழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’ என்கிற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த மதகஜ ராஜா, கெஸ்ட்ரோலில் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களின் வரிசையில் இது விஷாலுக்கு மூன்றாவது படமாகும்.. இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிக்கிறார். இவருக்கும் சுந்தர்.சியுடன் இதுமூன்றாவது படம் தான்.

இந்தப்படத்திற்கு பாப் பாடகரான ‘ஹிப் ஹாப் தமிழா’ புகழ் ஆதி இசையமைக்கிறார். தமிழ் ஹிப் ஹாப் இசை ஆல்பம் மற்றும் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உட்பட சில படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார் ஆதி

Comments are closed.