
பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படம் மூலமாக தமிழ்சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தவர் தரண்குமார். அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக்கண்டேனே முதல் முறை’ பாடலை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்தப்பாடலில் தன் இசையால் விளையாடி இருப்பார் இசையமைப்பாளர் தரண்குமார்.
மீண்டும் பாக்யராஜின் மகன் சாந்தனு நடித்த ‘சித்து பிளஸ்டூ’ படத்திற்கும் இசையமைத்தார். தொடர்ந்து ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘போடாபோடி’ படங்களுக்கு இசையமைத்த தரண்குமார், விஷால் நடித்த ‘சமர்’ படத்திற்கு பின்னணி இசை அமைத்தார்.
நானி நடித்த ‘ஆஹா கல்யாணம்’ படத்திற்கு துள்ளலான பாடல்களை வழங்கிய தரண்குமார், தற்போது சிபிராஜ் நடிக்கும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் தரண்குமாருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.