“10வது நிமிடமே ஒகே செய்த கதை இது” ; அதர்வாவின் ‘தட்’ மொமென்ட்..!

235

atharva

ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் கதையை கேட்ட பத்தாவது நிமிடத்தில் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார் அதர்வா. இதுபற்றி அவர் கூறியதாவது,

“இதுவரை நான் வெவ்வேறு வித்யாசமான கதையில் நடித்துள்ளேன். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்த பிறகு தான் எனக்கு காமெடி நன்றாக வரும், காமெடி எனக்கு பிடிக்கும் என்று எனக்கே தெரியும். எனக்கு ரொம்ப நாளாக காமெடி கலந்த ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தின் கதையை கேட்கும் போது முதல் பத்து நிமிடத்திலேயே எனக்கு தெரிந்து விட்டது” என்கிறார் அதர்வா.

“ஜெமினிகணேசன் சார் என்றால் ‘லவர் பாய்’ என்று எல்லோரும் சொல்லுவார்கள் அவர் ஒரு காதல் மன்னன்.. அவருடைய பெயரை வைத்துக்கொண்டு நான் ஒரே ஒரு நாயகியுடன் நடிக்க முடியாது. நான் படத்தில் நடித்த 5 கதாநாயகிகளுடனும் மகிழ்ச்சியோடு தான் நடித்தேன். எனக்கு பெண்கள் ரசிகர்களாக இருப்பது மிகவும் சந்தோஷமான ஒன்றாகும்” என கூறியுள்ளார் அதர்வா.

Comments are closed.