“‘பிக்பாஸ்’ மூலம் தியேட்டரில் கூட்டம் குறையும்” ; மன்சூர் அலிகான் ஆதங்கம்..!

285

mansoor alikhan

புதிதாக உருவாகி வரும் ‘உறுதி கொள்’ படத்தில் கோலி சோடா கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பை கிளப்பும் விதமாக பேசினார் நடிகர் மன்சூர் அலிகான்..

தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு.. அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அவர் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறு நாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட். நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னாஆகும் அவர் யோசிக்க வேண்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் மன்சூரலிகான். இந்த விழாவில் முனீஸ்காந்த், அபிசரவணன், இசையமைப்பாளர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.