‘விருச்சககாந்த்’ திற்கு நடிக்க வாய்ப்பு வழங்கினார் நடிகர் அபி சரவணன்!

226

????????????????????????????

கடந்த ஒரு வாரமாக காதல் படத்தில் நடித்த ‘விருச்சககாந்த்’ சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார், திரையுலகம் அவரை கண்டு கொள்ளுமா என செய்திகள் வந்து கொண்டிருந்தது..

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ‘வேகத்தடை ‘ குறும்பட நிகழ்ச்சி திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன் கூடவே நடிகர் ‘விருச்சககாந்த்’ அவர்களையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான சில உதவிகளை செய்தார்.. நேற்றும் ‘உறுதிகொள்’ ஆடியோ விழாவில் ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு ஒரு காசோலையை அளித்தார்

இதுபற்றி அபி சரவணன் கூறும்போது, “தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் எனது படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு தகவலை கூறியவுடன்… நாளையே அவருக்கான நடிப்பு வாய்ப்பை வழங்கினார்.. மேலும் அடுத்த வாரமே தொடங்க இருக்கும் எனது புதுப்படமான “சூறாவளி”யின் இயக்குனர் குமார்நந்தாவும் ‘விருச்சிகாந்த்’ நடிக்க வாய்ப்பு உடனே வழங்கினார்…

தவிர அண்ணன் மன்சூரலிகான் எனது வேண்டுகோளை ஏற்று அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார். மேலும் பெங்களூருவை சேர்ந்த பேஷன் டிசைனர் ‘கிரிஷ்’, விருச்சிககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதோடு அவரை மாடலாகவும் பயன்படுத்தி கொள்கிறேன் எனவும் உறுதி அளித்துள்ளார்” என மகிழ்ச்சியுடன் தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

Comments are closed.