உண்மையாகவே இபடித்தான் நடந்துகொள்கிறார்களா இல்லை டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக நடிக்கிறார்களா என கண்டுபிடிக்க இயலாதபடி ஒவ்வொவொரு நிகழ்வும் நடக்கிறது ‘பிக்பாஸ்’ எபிசோடில்.. சமீபத்தில் கஞ்சா கருப்புவுக்கும் ‘நாடோடிகள்’ பரணிக்கும் ஏற்பட்டது கூட அப்படி கலாட்டா தான்..
குளிப்பதற்காக கிளம்பிய பரணி, கஞ்சா கருப்புவை அழைத்து வீட்டையெல்லாம் கூட்டி சுத்தமாக வைக்கும்படி கூறிவிட்டு குளிக்க போய்விட்டார். குளித்துவிட்டு வந்த பரணியிடம் சென்று தகராறு செய்த கஞ்சா கருப்பு, “நீ யார் என்னை கூட்டு என உத்தரவிட என சண்டைக்கு போனதுடன், அங்கே இருந்த தீயணைக்கும் கருவியையும் எடுத்து பரணியை அடிக்க பாய்ந்துவிட்டாராம்.

Comments are closed.