விஜய்சேதுபதி-த்ரிஷா நடிக்கும் ‘96’ ; பூஜையுடன் துவங்கியது..!

204

96

நயன்தாரா, தமன்னா ஆகியோருடன் இணைந்து நடித்து வெற்றிப்படங்களை கொடுத்த விஜய்சேதுபதி தற்போது த்ரிஷாவுடன் இணைந்து ‘96’ என்கிற படத்தில் நடிக்கிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.. இது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நடைபெறும் கதையாம்.

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஒரு ரசிகனாக த்ரிஷாவை பார்த்து ரசித்த நான் அவருடனேயே ஜோடியாக நடிப்பேன் என நினைக்கவே இல்லை” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “இது அற்புதமான காதல் கதையாக உருவாக இருக்கிறது.. இந்தப்படத்தின் கதையுடன் கடந்த ஒரு வருடமாகவே பயணித்து வருகிறேன்” என த்ரிஷாவும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Comments are closed.