“தமிழ்சினிமாவின் மகேஷ்பாபு” ; கௌதம் கார்த்திக்கிற்கு ஆர்.கண்ணன் புகழாரம்..!

234

gautham karthik

மினிமம் கியாரண்டி படங்களின் இயக்குனர் என்று பாராட்டப்படும் இயக்குனர் ஆர்.கண்ணன் தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘இவன் தந்திரன்’.. கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாகவும் ஆர்ஜே.பாலாஜி முக்கிய வேடத்திலும் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது..

இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ், கௌதமின் முகத்துக்கு நேராகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, அவர் தன்னை சினிமாவுக்கேற்றபடி மாற்றிக்கொண்டு நல்ல இடத்திற்கு வரவேண்டும் என அறிவுரையும் கூறினார்.. கௌதம் கார்த்திக்கும், பாண்டிராஜ் கூறிய அறிவுரையை தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

தற்போது கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியும், தற்போது கௌதம் கார்த்திக் சரியான பாதையில் செல்வதற்கு ஏற்கனவே அடியெடுத்து வைத்துவிட்டதாகவும் அவரின் அர்ப்பணிப்பு உணர்வு பற்றி நற்சான்றிதழ் கொடுத்து பேசினார்.

அடுத்ததாக பேசிய இவன் தந்திரன் படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன், கௌதம் கார்த்திக் அதிகாலையில் முதல் ஆளாக சைக்கிள், பைக், கார் என ஏதோ ஒன்றின் மூலம் ஷூட்டிங் வந்துவிடும் கௌதம் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதியாகத்தான் கிளம்பி செல்வார்” என்று பாராட்டினார்.

மேலும் இன்னும் இரண்டு வருடங்களில் எப்படி ஆந்திராவின் பிரின்ஸ் என்று மகேஷ்பாபுவை சொல்கிறார்களோ அதேபோல, தமிழ் சினிமாவின் பிரின்ஸ் என கௌதம் கார்த்திக்கை சொல்லும் நிலைக்கு அவர் உயர்வார்” என்றும் கட்டியம் கூறினார் ஆர்.கண்ணன்..

Comments are closed.