நிழல்கள் ரவி மகன் திருமண வரவேற்பு ; மு.க.ஸ்டாலின்-இளையராஜா நேரில் வாழ்த்து..!

272

nizhalkal ravi son wedding reception

தமிழ் சினிமாவில் கடந்த முப்பத்ததைந்து வருடங்களுக்கு முன் ‘நிழல்கள்’ என்கிற படத்தில் அறிமுகமாகி அதனாலேயே இன்றுவரை ‘நிழல்கள்’ ரவி என்கிற பெயரோடு அறியப்படுவர் தான் குணச்சித்திர நடிகர் நிழல்கள் ரவி. இவரது மகன் ராகுல்ராஜுவுக்கும், மதுப்ரியா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த திருமண வரவேற்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, இசைஞானி இளையராஜா, கலைப்புலி தாணு, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Comments are closed.