‘3 டிக்கெட்டில் 5 பேர் படம் பார்க்கலாம்’ ; ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ வியூகம்..!

201

vaigai express

“600 பேர் அமரும் தியேட்டரில் 100 டிக்கெட் கூட விற்கமாட்டேங்குது… நான் 300 ரூ டிக்கெட்டை 100 ரூபாய்க்கு கொடுக்கிறேன். அத்துடன் 3 பேர் டிக்கெட்டு எடுத்தா 2 பேரை இலவசமா கூட்டிட்டு வா என்கிறேன்… குடும்பம் குட்டியோட மக்கள்.சந்தோஷமா படம் பார்க்கட்டுமே’ இப்படி அறைகூவல் விடுத்திருப்பது யார் தெரியுமா..? ‘எல்லாம் அவன் செயல் மூலம்’ கவனிக்கத்தக்க நடிகராக மாறி, இப்போது ‘வைகை எகஸ்பிரஸ்’ படத்தில் நடித்துள்ள நடிகர் ஆர்.கே தான்..

‘வைகை எக்ஸ்பிரஸ்’ மலையாளத்தில் வெளியான ஒரு சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக் தான்.. படத்தை இயக்கிருப்பதும் மலையாள இயக்குனரும் ஆர்.கேவை ஒரு நடிகராக நிலைநிறுத்தியவருமான மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் தான். இந்த வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர்.கே வெளியிட்ட அதிரடி அறிவிப்பின் ஒரு பகுதிதான் மேலே சொன்னது..

இந்தப்படத்திற்காக விநியோக முறையிலேயே மாற்றம் கொண்டு வந்துள்ளாராம் ஆர்.கே. “பலகோடி வர்த்தகம் நடக்கும் இடம். பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இடம். ஆனால், நசிந்து கிடக்கிறது. 300 ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்டை எடுத்துப் படம் பார்த்துட்டு, குடும்பத்தைக் கூட்டிட்டுப் போக முடியலயேன்னு புலம்புறான்.. இன்னொரு பக்கம் ஆன் லைன்ல புக் பண்ணா எவனோ ஒருத்தன் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூ சம்பாதிக்கிறான்…கேட்டா சர்வீஸ் சார்ஜுங்கிறான்… 10 டிக்கெட் புக் பண்ணாலும் 300 ரூபாய் வாங்கிவிடுகிறான்… இதை முதலில் ஒழிக்கவேண்டும்.

அப்படி உருவானதுதான் ஹிட் பாக்ஸ்… இது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுக்கான உத்திரவாதமான முதல் படி… ஆயிரம் வி நியோகஸ்தர்களை உருவாக்கினேன்… எங்க ஹிட் பாக்ஸ்ல டிக்கெட் விற்கிறவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய்தான் வாங்குகிறார்கள். 1 லட்சம் டிக்கெட் விற்றால் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார்கள்…. என் எழைத்தமிழனும் லட்சாதிபதி ஆகட்டுமே…

ஹிட் பாக்ஸ் மூலமா எட்டு கோடி பேரும் தியேட்டர்ல வந்து படம் பார்ப்பார்கள்… வைகை எக்ஸ்பிரஸ், தொடர்ந்து நான்கு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடும்” என தனது திட்டத்தின் சிறப்பம்சங்களை பட்டியலிடுகிறார் ஆர்.கே..

“ஹிட் பாக்ஸ் விநியோகம் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ் சினிமாவுக்கு வைகை எக்ஸ்பிரஸ் மூலம் வருகிறது… எதிர்காலத்தில் எங்கள் படங்களையும் ஹிட் பாக்ஸ் மூலம் விநியோகியுங்கள் என்று எல்லோரும் வருவார்கள்..” என்கிறார் நம்பிக்கையுடன் ஆர்.கே.

Comments are closed.