பெங்களூரு சுரங்க ரயில் பாதையில் ‘இமைக்கா நொடிகள்’..!

215

imaikka-nodigal-shooting
அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ‘டிமாண்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிவருகிறார்.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா நடித்துவருகிறார்.. தற்போது சில முக்கியமான ஆக்சன் காட்சிகளை படமாக்குவதற்காக பெங்களூரில் முகாமிட்டிருக்கிறது இந்தப்படத்தின் டீம்..

பெங்களூரில் உள்ள சுரங்க மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ட்ரெய்னில் நிகழும் ஒரு கடத்தல் காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். இந்தக்காட்சியில் போலீஸ் அதிகாரியான நயன்தாராவும் நடித்துள்ளாராம். சென்னை புயலால் பாதிக்கப்பட்டுள்ளபடியால், அது சீராக சில நாட்கள் ஆகும் என்பதால் பெங்களூரிலேயே இன்னும் சில காட்சிகளை படமாக்க முடிவுசெய்துள்ளர்களாம்.

Comments are closed.